நமது நாட்டில் இந்த ஆண்டு தொடங்கி இரணடு மாதங்களில் இது வரை மூன்று இசை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
இந்த மூன்று இசை நிகழ்ச்சிகளில் முதலாவது நிகழ்ச்சியில் கதிரேசன் மண்டபத்தில் டீ கடை பசங்க குழுவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடந்த பிரமாண்ட இந்திய கலைஞ்சர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சிகளில் முற்றாக நமது படைப்பாளிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
நமது கலைஞ்சர்களை வைத்து இசை நிகழ்ச்சியை ஏன் நடத்த முடியாது என்று பாடகர் மஹிந்தகுமார் மற்றும் இசை கலைஞ்சர் கருப்பையாபிள்ளை பிரபாகரன் ஆகியோர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கை இசை கலைஞ்சர்கள் சங்கம் இது தொடர்பாக எடுக்க போகும் முடிவு தான் என்ன?
நமது பாடகர்களை வைத்து பணம் சம்பாதிக்க முடியாதா? அல்லது நமது இசைக்குழுக்களை நம்பி களமிறங்க முடியாதா?
பொறுத்திருந்து பார்ப்போம்..