மார்ச் முதலாம் திகதி முதல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாடங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளி / ஒலிபரப்பினால் ஒரு பாடலுக்கு தொலைக்கட்சியாக இருந்தால் 100.00 ரூபாயும் வானொலியாக இருந்தால் 50.00 ரூபாயும் அந்த பாடலின் காப்புரிமையை பெற்றவருக்கு கொடுக்க பட வேண்டும் என ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இதுவரை நம் நாட்டில் எத்தனையோ சிரேஷ்ட பாடகர்கள் தங்கள் பாடல்கள் மூலமாக பிரபலமாகியுள்ளார்கள்.
ஆனால் அவர்களுக்கு அந்த பாடலினால் தங்களது வருமானம் ஒரு தடவையுடன் முடிந்து விடுகிறது சிலருக்கு மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதன் மூலம் கிடைக்கிறது.
ஆனால் இவர்களது பாடல்களை வானொலிகளும் ,தொலைக்காட்சிகளும் தினமும் ஒளி / ஒலிபரப்பு செய்து பெரும் வருமானத்தை ஈட்டுகிறார்கள்.
இவ்வளவும் நாம் குறிப்பிட்டது சிங்கள மொழி பாடகர்களை பற்றி அவர்களது நிலைமையே இப்படி என்றால் மனது தமிழ் பாடகர்களை பற்றி சொல்லவா வேண்டும்.
இலங்கை தமிழ் ஊடகங்கள் நமது கலைஞசர்களின் பாடல்களை ஒளி / ஒலிபரப்பு செய்தால் தானே நமது கலைஞசர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
எப்படியோ இந்த திட்டம் மூலமாக நமது கலைஞசர்களும் பயனடைந்தால் நமக்கு மகிழ்ச்சியே….