நிர்வாக இயக்குனர் பதவி | நடந்தது என்ன? | முழு விபரம் உள்ளே

இலங்கையின் ஊடக வரலாற்றில் பல ஜாம்பவான்கள் இருந்துள்ளார்கள்.அதுவும் நமது தமிழர்கள் பலர் சாதனை படைத்துள்ளார்கள்.

குறிப்பாக நமது தமிழ் ஊடகங்களில் உள்ளவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபலமானவர்கள் ஒரு சிலரே.அதில் குறிப்பாக கூற வேண்டும் என்றால் ஜெ ஸ்ரீ ரங்காவை கூறலாம்.

சக்தி தொலைக்காட்சியின் ஊடாக சிரச தொலைக்காட்சியின் மூலம் இலங்கை முழுவதும் பிரபலமாகி பாராளுமன்றம் வரை சென்றவர்.

அவரது திறமை அளப்பரியது.தமிழ் சிங்களம் போன்ற மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.இப்படி பல திறமைகள் கொண்ட ரங்காவை பெண் ஹோல்டிங் நிறுவனம் வளைத்து போட்டது.

EBC நிறுவனத்தை இலங்கையில் தற்போது நடத்தி வரும் பெண் ஹோல்டிங் நிறுவனம் தனது முன்னேற்றத்திற்கு ரங்கா அவர்களின் சேவையை நாடியது.

ரங்கா அவர்கள் தனது நண்பரான அல்லிராஜா சுபாஷ்கரனின் அழைப்பை ஏற்று EBC யின் நிர்வாக இயக்குனர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

சுவர்ணவாஹினி சிங்கள தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிகளையும் ரங்கா நடத்தினார்.இதனால் சக்தி தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய மின்னல் நிகழ்ச்சி பாரிய பின்னடைவை சந்த்தித்து வருகிறது.

EBC நிறுவனத்தின் 60 வீத பங்குகளை அலெக்சிஸ் இந்திரஜித் லொவெல் அவர்களும் மிகுதி 40 வீத பங்குகளை அல்லிராஜா சுபாஷ்கரனும் கொண்டுள்ளனர்.

இப்படி இருக்கும் போது EBC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து ரங்கா அவர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த செய்தி பொய்ய்யாக இருந்தால் நல்லது காரணம் எமது தமிழர் ஒருவர் இலங்கையின் மிக பெரிய ஊடக நிறுவனங்களின் ஒன்றான EBC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருப்பது எமக்கு பெருமையே.

எது எப்படியோ நாம் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்கா அவர்களின் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!