பிரியங்காவிற்கு
நமது கெத்தை காட்டிய
முழுவதும் படித்து பாருங்கள்
நேற்று பம்பலபிட்டிய கதிரேசன் மண்டபத்தில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடிய பாடகர்களின் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது.
இந்த இசை நிகழ்ச்சிக்கு இலங்கையின் இசைக்குழு தலைவரான செந்தூரன் இசை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இருந்து ஏராளமான மேடைகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இலங்கை பாடகர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் வளர்ந்து வரும் இளம் துடிப்புள்ள டீ கட பசங்க அணியினருக்கு மேடையில் பாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது மேடையில் இருந்த ப்ரியங்காவிடம் மனோஜ் இசை குழுவை அறிமுகம் செய்து வைத்தார்.
ராகுலை அறிமுகம் செய்து வைத்த நிரோஷ் யுவன் சங்கராஜ் இசைக்கு பாடல் எழுதியவர் என்று பிரியங்காவிற்கு அறிமுகம் செய்து வைக்க மே சிலிர்த்து போனார் ப்ரியங்கா.
டீ கட பசங்க குழுவின் இறுதி பாடலை பாடி முடித்த பிறகு சபையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து ”இந்த பாடல்கள் எல்லாம் எமது சொந்த பாடல்கள் ” என்று கூறி சபை கைத்தட்டலை பெற்றார்கள்.
நாமும் அதை தான் சொல்கிறேன் இந்திய பாடகர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சி வைக்கும் போது உள்ளூர் கலைஞ்சர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.உலகம் உங்களை போற்றும் .
டீ கட பசங்க குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.