கிஷாந்தின் 6 வது படைப்பு மீண்டும் ஒரு முயற்சி

ஒரு இயக்குனருக்கு தனது படைப்புக்களை திரையிடுவதில் இருக்கும் மகிழ்ச்சி அளவு கடந்தது.

அது பெரிய படமாக இருந்தால் என்ன சாதாரண குறுந் திரைப்படமாக இருந்தால் என்ன?

வெஞ்சம் ,போற வழியில , வறுமை கொடிது ,சிவா அண்ணா 2 ,தேனிலவு ஒரு பாடல் போன்ற படைப்புகளுக்கு சொந்தக்காரர் தான் கிஷாந்த்.

தனது திறமையால் படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் கிஷாந்தின் அடுத்த படைப்பு மீண்டும் ஒரு நிமிடம்.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 5 மணிக்கு YMCA மண்டபத்தில் திரையிட ஏற்பாடாகியுள்ளது.

ஏற்கனவே மட்டக்களப்பின் வேட்டையன் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு நிமிடம் வெளியாகவுள்ளது.

ஜனா,AK சந்துரு , திவ்ய நிலா , விகிர்தன் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள மீண்டும் ஒரு நிமிடம் கணவன் மனைவி உறவு தொடர்பான படமாம்.

இதோ இவர்கள் தான் படக்குழுவினர்

Cast:- Jana RJ | AK Chanthuru | Divya Nila | Vikirthan
Cinemotography:- S.N.Vishnujan
Editing :- Abishek (A1 Editz)
Music:- Shangarjan
Vfx :-Tj Renujan
Sound Arrangrments:-Grason Prashanth (அ கலையகம்)
Mixing:- Thinesh Na (Resound Records)
Stills :- Tharshikaran (Pixel Studio)
Poster:- Ajindraprashath ( Creativity is life)
Produced By :- Y. Gayathhree
Written & Direct :- K.Kishanth

குறும்படம் வெளியீடு செய்ய இருக்கும் தருணத்தில் நமது கலைஞர்களின் படைப்புகளையும் திரையிட படக்குழுவினர் தயாராம்
உங்களுடைய படைப்பு 5 நிமிடம் தொடக்கம் 10 நிமிடத்துக்குள் இருந்தால் உங்களுடைய படைப்புகளும் திரையிடப்படும்… தொடர்புகளை மேற் கொள்ளுங்கள் 0752322880

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!