இலங்கையின் ஊடக துறையை பொறுத்த வரையில் அவர்களால் நமது படைப்பாளர்களுக்கு நண்மைகள் பல நடந்துள்ளது.
நமது கலைஞ்சர்களின் படைப்பை ஊக்குவிக்க அவர்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் நமது படைப்பாளிகளின் படைப்புகளை கொச்சை படுத்தாமல் இருந்தாலே போதும் என்று தற்போது இளநகை கலைஞ்சர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அன்மையில் இலங்கை வாணொலி ஒன்றின் அறிவிப்பாளர் ஒருவர்
”எந்தக் காலத்திலயும் நம்ம நாட்டுப் படங்களை எவனும் பார்க்கமாட்டாங்கன்னு தெரிஞ்சும்…”
”இன்னும் நம்பி படம் எடுப்பவர்கள்தான்
தன்னம்பிக்கையின் மொத்த உருவங்கள்”
இவ்வாறு பதிவிட்டிருந்தார்.அந்த பதிவு தொடர்பாக தற்போது சில ஈழத்து கலைஞர்கள் இது தொடர்பாக சில விமர்சனங்களை எழுதி வருகிறார்கள்.
இயக்குனர் மதி சுதா இவ்வாறு பதிவிட்டுள்ளார்…
நான் கூறும் இச்சம்பவம் இதில் உள்ள படத்துக்கு எதிர்மாறானது.
முற்குறிப்பு – ஏற்கனவே எனது உம்மாண்டி திரைப்படம் யாழில் 4 காட்சிகள் அரங்கம் நிறைந்து ஓடிய வரலாறு என்னிடம் உள்ளது…….
தாத்தா குறும்படத்தை எடுத்து விட்டு (2013) post production க்கு பணம் இல்லாமல் இருந்த நேரத்தில், இரவு ஏன் படம் முடிக்கவில்லை என்பதை எழுதி விட்டுப் படுத்து விட்டேன்.
காலை 6 மணிக்கு எனது போன் நம்பருக்கு புது நம்பரில் இருந்து போன் வருகிறது . தனது பெயர் ரவீந்திரன் என்ற போது தான் எனது பேஸ்புக் இல் நீண்ட காலம் என் நண்பராக இருப்பவர் என்பது தெரிந்தது. அப்போது அவர் கொழும்பில் ஒரு சாதாரண வேலையில் இருந்தார் (இப்போதல்ல).
அவர் சொன்னது
” உங்கட படம் நான் எப்படியாவது பார்க்கோணும் அது கட்டாயம் வெளியே தெரிய வேண்டிய கதை எழும்பி பேர்ஸில் பார்த்தேன் இப்ப என்னட்டை 500 /- ரூபா தான் இருக்கு குறை நினைக்காமல் இதை வாங்குங்கோ”
அந்த இடத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் தனது பணப்பையில் இருக்கும் பணத்தின் தொகை அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லை ஒரு படைப்பாளியின் / ஒரு படைப்பின் மதிப்பளிக்கும் தன்மை தெரிந்திருக்கிறது. இப்படியானவர்கள் தான் எங்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விட இத்துறையில் இருந்து நாம் வருவாய் பெற்றுக் கொண்டும் தான் இருக்கிறோம் என்பது கூட பலருக்கு இங்கே தெரியாது. என்ன பெறும் காசையும் அதற்குள்ளெ தான் போடுவதால் அடுத்த படைப்பு வருகிறதே தவிர அப்பணத்தை வைத்த ஒரு சேட் வாங்கக் கூட மனம் வருவதில்லை.
அதன் பின் நான் என்ன வெளியீடு செய்தாலும் முதலாவது ரிக்கேட்டை ரவீந்திரனுக்கே அனுப்பி வைக்கும் பழக்கம் ஒன்றை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்.
நீங்கள் இன்னொருவருக்காக போட்டதாக இருந்தாலும் பொதுவாக இருப்பவர்களை பாதிக்கும் என்பது ஏன் யோசிக்க முடியாமல் போனது. என்னைப் போல் இங்கு பலர் இந்த கலைத்துறை தான் வாழ்க்கை என வாழ்க்கையில் பல விடயங்களைத் துறந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் சகோதரர்.
அவர் பதிவு ஏற்படுத்திய மனவருத்தம் காரணமாக நான் இதை எழுதியதாக எல்லாம் யாரும் எடுத்து விடாதீர்கள் என்னைப் பொறுத்தவரை எனக்கு இதுவும் ஒரு motivational word தான் ஏனென்றால் இதை விட எத்தனையோ மடங்கு மோசமான வசவுகளை கேட்டுக் கொண்டு தான் தினம் தினம் இத்துறையில் உழைக்கிறோம்.
முக்கிய குறிப்பு – இந்த படத்தில் உள்ள கருத்தை வைத்தோ அல்லது நாங்கள் முழு நேரமாக இயங்குகிறோம் என்பதையோ வைத்து கலைஞர்கள் மேல் யாரும் அனுதாபப்பட்டு விடாதீர்கள். எங்களிடம் சொந்தமாக கௌரவமான தொழில்கள் இருக்கிறது ஆனால் கலை கொடுக்கும் அந்த ஆத்ம திருப்தியை எந்த தொழிலும் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.
என பதிவிட்டுள்ளார்.எது எப்படியோ பொறுத்திருந்து பார்போம் .
இது இவ்வாறிருக்க இந்த வாரம் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளரின் சமூக வலைதள பக்கங்கள் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளதாம்.
காணத்தானே செய்யும் ஒட்டு மொத்த படைப்பாளிகளும் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இனி வரும் காலங்களில் நாம் நமது கலைஞ்சர்கள் ,சினிமா தொடர்பில் சிந்திப்போம்…சிந்தித்து எழுதுவோம் ,பேசுவோம் .