இரண்டாவது அரச வானொலி விருதுகள் விழாவில் சூரியன் வானொலிக்கு மூன்று விருதுகள் கிடைத்தது.
இதில் சூரியனின் நிகழ்ச்சி பணிப்பாளர் லோஷனுக்கும் அரச வானொலி விருது கிடைத்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட லோஷன் விஸ்வாசம் தல அஜித்தின் ஸ்டைலில் விருது வாங்க வந்திருந்தார்.
அவர் மட்டுமே அறிவிப்பாளர்களில் வேட்டியுடன் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் வானொலிக்கு கிடைத்த ஏனைய விருதுகளில் ஜூலியன் மற்றும் மனோஜ் ஆகியோர் விருது பெற்றனர் .
லோஷன் தனது முகப்புத்தக பதிவில் இவ்வாறு இவ் விருதுக்கு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
கிடைத்த விருதை விட, கட்டிய வேட்டிக்குத் தான் அதிக வாழ்த்துகள் !!
அதிலும் ஒரு தனி சந்தோஷமும் திருப்தியும் !
தம்பிமார் மனோஜ், ஜூலியனுக்குக் கிடைத்த விருதுகளில் தான் அதிக மகிழ்ச்சி.
எதிர்காலத்துக்கான நம்பிக்கை விதைகள் அவை !!
லோஷன் உட்பட சூரியன் வானொலிக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.