இரண்டாவது அரச வானொலி விருதுகள் விழாவில் சக்தி வானொலிக்கு பத்து விருதுகள் கிடைத்தது.
இந்த விருதுகளுடன் வெற்றிகளிப்பை கொண்டாட சக்தியின் சக்தி ஷாட் நிகழ்ச்சிக்கு அலைவரிசை பிரதானி அபர்ணா சுதன் உள்ளிட்ட சக்தி குழுவினர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.தான் முதலாவதாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இன்னொமொரு எமன் நாடகத்தின் முதலாவதாக நடித்த அனுபவம் தொடர்பாக அபர்ணா சுதன் மனம் விட்டு பேசினார்.
ஆதியோகி நாடகத்திற்கு சிறந்த பிரதிக்கான அரச வானொலி விருது கிடைத்தது.
தனது அணியினர் திறமையுடன் செயற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து இதுப்போன்ற படைப்புகள் சக்தி வானொலியில் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த தான் ஒரு சினிமா கதையை எழுத விருப்பம் இருப்பதாகவும் அபர்ணா கூறினார் .
அபர்ணா உள்ளிட்ட சக்தி குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.