உண்மையில் மகராசிக்கு ஒரு பெரிய சபாஷ்.இந்த பாடலை நாம் பார்த்தோம் உன்னிப்பாக அவதானித்தோம்.ஒட்டு மொத்த நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் சேர்த்து ரசிகர்களுக்கு காண கிடைத்த கண்களுக்கு விருந்து தான் மகராசி.
ரணிலின் ஆட்டம் ,ஸ்டாபினியின் கலக்கல்,லக்ஷியின் கோபம் என கதாப்பாத்திரங்கள் எல்லாமே அருமையான பங்களிப்பு செய்துள்ளார்கள்.
கேமராவை பிரசாத் கையாண்ட விதம் சொல்ல வார்த்தைகள் இல்லை.பிரசாத் தனது தொகுப்பை சர்வ கட்சிதமாக முடித்துள்ளார்.
இந்த பாடலின் முதுகெலும்பு இது தான்.
சுமித்தின் இசை பாலமுரளியின் கலைநயம் பாடலுக்கு பக்க பலம்.இது போன்ற பாடல்கள் தான் எதிர் காலத்தில் வர வேண்டும்.இந்த காலத்திற்கேற்ற பாடல் நிச்சயமாக அனைவராலும் பேசப்படும்.பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
பாடலை ரசிக்க: https://www.youtube.com/watch?v=VgrAlVowVmE