இலங்கைக்கு இதுவே ஆரம்பம் 16 & 17 ஆம் திகதி ஹட்டனில்

SAI JOTHI ENTERPRISE தயாரிப்பில் இயக்குனர் சஞ்சய் யோகேஸ்வரன் அவருடைய ‘இதுவே ஆரம்பம்” முழுநீளத்திரைப்படம் இம் மாதம் 16 & 17 ஆம் திகதி ஹட்டனில் வெளியிடப்படவுள்ளது.

இயக்குனர் சஞ்சய் யோகேஸ்வரன் இந்த படத்தை மலையகத்தை களமாக கொண்டு செதுக்கியுள்ளார்.

தற்போது இலங்கையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலர் நடித்துள்ள இப்படம் வருவதற்கு முதலே பெரிதாக பேசப்பட்டு வெற்றியடைந்துவிட்டது

இப்படம் தொடர்பாக நம் நாட்டின் சிறந்த இயக்குனரான தினேஷ் கனகராஜ் தனது முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவு

நம் நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமான “இதுவே ஆரம்பம்” சஞ்சய் யோ Sanjai Yogeswaran இயக்கத்தில் வெளிவர உள்ளது, திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி.

திரைப்படமானது 16ஆம், 17ஆம் தேதிகளில் ஷட்டன் ஸ்ரீ கிருஷ்ண பவான் மண்டபத்திலே திரையிடபடவிருக்கிறது, இதற்கான டிக்கெட்டுகள் இப்போது விற்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

ஆகவே என்னை சார்ந்த என்னை நேசிக்கின்ற திரைப்பட விரும்பிகள் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் நம் நாட்டில் திரைப்படங்களை நாங்கள்தான் ஊக்கிவிக்க வேண்டும், நானும் திரைதுறையில் இருப்பதால் என்னை சார்ந்த என்னுடைய சக கலைஞர்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்காகவும் திரைத்துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களுக்காகவும் திரைப்படத்தை கண்டுகளிக்க வேண்டும்,

நாங்கள் புதியவர்களை ஊக்கிவிக்க வேண்டும் என்பது முக்கியமான விடயம் ஆகவே “இதுவே ஆரம்பம்” திரைப்படத்தை கண்டிப்பாக பார்த்து மகிழுங்கள். உங்களுக்கு பிடிக்கும் வகையில் இயக்குனர் சஞ்சய் யோ மற்றும் அவர்களுடைய குழுவினர்கள் திறன்பட செய்திருக்கிறார்கள்.
இத்துறை இத்திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி ❤️

இந்த திரைப்படத்தில் • நடிகர்கள் :- கஜன் கணேசன், பிரஷா ராஜேந்திரன், ஷாமலா நிரஞ்சன், இனாஸ், தினேஷ் கனகராஜ், ராஜா கணேசன், ஆண்டன் ஓனாசியஸ், லீலா, தேவி, நீல்றெக்சன், அஜந்தன், திலிபமாலா, கேதீஸ்வரன், சூர்யமித்ரா, சுரேஷ், ரஷிகா அருள்செல்வம், விக்னேசன், எமி ஜோஹானா, சஞ்சய் யோகேஸ்வரன்

• இசையமைப்பாளர்கள் :- அரோஷ் & நரேஷ்

• ஒளிப்பதிவாளர் :- சரோன் ஜே

• படத்தொகுப்பாளர் :- கதிர்

• ஒப்பனையாளர் :- சஞ்சீவனி எம்புல்தெனிய

• காட்சிகள் விளைவாக்காளர் வடிவமைப்பாளர் (VFX) & திரை வண்ணமமைப்பாளர் & மென்திரையமைப்பாளர் (DI) :- கதிர்

• ஆடைகள் வடிவமைப்பாளர் :- சஞ்சய் யோகேஸ்வரன்

• விளம்பரம் & தலைப்பு வடிவமைப்பாளர் :- திலோஜன் வி.எம்

• புகைப்படங்கள் :- சுரேஷ்

• திரை விளம்பர தேர்ச்சி :- அக்கோ ரணில்

• உரையாடல் & எழுத்தாளர் – சஸ்மிதா இளஞ்செழியன்

• எழுத்து & இயக்குனர் :- சஞ்சய் யோகேஸ்வரன்

• உதவி இயக்குனர்கள் :- சஸ்மிதா இளஞ்செழியன், சுஜீதரன், கமலினி

• கலை இயக்குனர்கள் :- குமரவேல் தயாநீதிபாபு, தினேஷ் கிருஷ்ணன் கே.டி.கே

• பின்னணி குரல் பதிவுக்கூடங்கள் 01 & 02 :- M8 Music Production & Studio, SA Studio Sri Lanka

• திரைப்பதிவாளர் :- டி.பி. சரஸ்தீன்

• தயாரிப்பு குழு தலைவர் :- அபி ஸ்ரீயாதி

• தயாரிப்பு குழு – Pro Epic 84

• தயாரிப்பு பொறுப்பாளர் :- கஜன் கணேசன்

• தயாரிப்பு இல்லம் :- ஆக்கர்

• தயாரிப்பாளர் :- சஞ்சய் யோகேஸ்வரன்

• தயாரிப்பு நிறுவனம் :- SAI JOTHI ENTERPRISE

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!