“எனக்கொரு அஞ்சலிக்கூட்டம்” இறுதி மரியாதை கிடைக்க வேண்டும்

நம் நாட்டில் சாதாரண குறுந் திரைப்படம் தனிப்பட்ட செல்போனில் எடுப்பது கூட கஷ்டமான காலகட்டத்தில் , ஒரு தொழிலை செய்துகொண்டு தனது குடும்பத்தையும் கவனித்து கொண்டு கலை துறையையும் கைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆயிரம் கலைஞர்கள் உண்டு .

அதில் தினமும் நாம் முகப்புத்தகத்தில் பார்க்கும் இளங்கோ சுதாகர்யை பற்றி கூற வேண்டும் .

மிகவும் நேர்த்தியான ஒரு கலைஞர் . அபார திறமைகளை கொண்ட இந்த படைப்பாளியின் மற்றுமொரு சிறப்பான படைப்பை நேற்று நாடக விழாவில் காண முடிந்தது .

குறிப்பாக இதுபோன்ற படைப்புக்கு நிச்சயமாக தேசிய அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் இவர் மென்மேலும் வளர உதவியாக இருக்கும் .

அவரது படைப்பு தொடர்பாக அவர் இட்ட முகப்புத்தக பதிவு

நேற்று டவர் நாடக அரங்கில் 50வது அரச நாடக விழாவின் இரண்டாம் சுற்றில் “எனக்கொரு அஞ்சலிக்கூட்டம்” நடந்து முடிந்தது.

இறந்த பின் எவர் நமக்கு செய்யப்போகிறார்கள்? அதை நம் கண்கள்தான் காணப்போகிறதா? ஆகையால் வாழும் போதே எனக்கொரு அஞ்சலி கூட்டம் இந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கப்போகிறது..

இலங்கை தமிழ் கலைத்துறையில் எமது கலைஞர்களின் அடிப்படை பிரச்சினைகளை மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வாக நாடக வடிவில் எடுத்துக்கூறினேன்.

எமது நாட்டில் தமிழ் மேடை நாடகம் ஒன்று பாகம் ஒன்று பாகம் இரண்டு என அரங்கேறிய முதல் தருணமிது.

“ஒத்திகையில் ஒருத்திகையில்” பாகம் ஒன்றாகவும் “எனக்கொரு அஞ்சலிக்கூட்டம்” பாகம் இரண்டாகவும் அரங்கேற்றம் பெற்றன..

இவை இறுதி சுற்று போகிறதோ இல்லையோ
எமது பிரச்சினைகளையும் எமது வளர்ச்சிக்கான குறையையும் சுட்டிகாட்ட வேண்டியது எமது கடமை. அதனை செய்தோம் என்பது எமக்கு ஆத்ம திருப்தி..

தொடர்ந்தும் பல படைப்புகளை படைக்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!