தற்போதைய மலையகத்தின் பெருமை முயற்சி
விடுபட்ட திறமையானவர்களுக்கு விடாமுயற்சி

மலையகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இனி மலையகத்தின் பெருமை பேச வேண்டும். நம்மை நாமே ஏன் இகழ்ந்து பேச வேண்டும் நம் சமூகத்திலிருந்து பலர் இன்று பலதுறைகளில் சாதனையாளர்களாக திகழ்கின்றனர் அவர்களை வெளியுலகுக்கு காட்டுவது மலையகத்தில் பிறந்த மலையக சமூகத்தின் தேவை இன்று பலரும் பலதுறைகளில் சட்டத்தரணிகளாக நீதிவான்களாக ஆசிரியர்களாக வைத்தியர்களாக பிரபல ஊடகவியலாளர்களாக இசையமைப்பாளர்களாக நடிகர்களாக அரசியல்வாதிகளாக எஞ்சினியர்களாக பலதுறைகளில் சாதிக்கின்றனர் மலையக சமூகம் இழிவாக பேசக்கூடிய ஒன்றல்ல என்பதை நாம் உணரவேண்டும்

அண்மைக்காலமாக சமூகவலைத்தளத்தில் மலையக பெருமை என்ற ஒரு பக்கம் உருவாகி மலையக திறமையாளர்களை அறிமுகப்படுத்துகிறது இது நல்லதொரு விடையம் பிரபல வானொலி அறிவிப்பாளர் லங்கேஷ் அவர்களின் சமூகவலைத்தள பக்கம் என்பதை தெரிந்துகொண்டோம் நல்லவிடயத்தை நாம் வரவேகின்றோம்

இருந்தும் இன்னும் திறமயானவர்கள் மலையகத்தில் இருக்கின்றனர் அவர்களையும் அதில் இணைத்துக்கொண்டாள் இன்னும் சிறப்பாக இருக்கும்

மறைந்தும் மறையாத மலையகத்தின் மாணிக்கச் சுடர்களை நாம் அறிமுகம் செய்வது நல்லொதொரு கடமை.

இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!