LPL தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான உத்தியோகபூர்வ வானொலி தமிழ் எப்.எம் 

லங்கா பிரீமியர் லீக் LPL தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான உத்தியோகபூர்வ தொலைகாட்சி பங்காளராக SBC TV யும், Exclusive radio partner ஆக தமிழ் எப்.எம் வானொலியும் இணைந்துள்ளன.


யூலை மாதம் 30ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது பருவகாலத்துக்கான போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
Lyca’s Jaffna Kings, Colombo Strikers, Dambulla Aura, Galle Titans, B-Love Kandy ஆகிய 5 அணிகள் மோதும் மாபெரும் கிருக்கட் தொடரில், கடந்த 3 வருடங்களாக லைக்காஸ் ஜப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.


வருடாந்தம் நடத்தப்படும் LPL தொடர் இலங்கை ரசிகர்களை கடந்து உலக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.


ஜீலை 30 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தொடரின் போட்டிகள் மாலை 3 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் ஆரம்பமாகும்.


இந்த LPL போட்டிகளை SBC தொலைக்காட்சியில் கண்டுக்களிக்க முடியும் என்பதுடன் போட்டிகள் தொடர்பான முழு தகவலையும் எங்கேயும் எப்போதும் ( 99.5 | 99.7 | www.tamilfm.online )TAMIL FM வானொலி ஊடக உடனுக்குடன் கேட்கவும் முடியும்.


LPL 2023 பருவகால தொடரின் உத்தியோகபூர்வ ஒளி – ஒலிபரப்பு உரிமைகளை பெற்றுள்ள SBC TV மற்றும் தமிழ் எப்.எம் வானொலி என்பன அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையிலான LYCA குழுமத்தின் ஊடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!