TEA பாடல் யாருக்கு அடி ? சுரண்டி சாப்பிடும் அ……..!
TEA – ஆண்டுகள் பல கடந்து அடிமைபட்டு கிடக்கும் மலையக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் விடியலுக்காய் இளைஞர்களின் புரட்சிகர குரலாய் வெளிவந்திருக்கும் பாடல் டீ. Cv Laksh ன் இசையில் இதயத்தை தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான குரலோடு வெளிவந்திருக்கிறது .
இந்த பாடலுக்கு பங்களித்த இளைஞர் படைக்கு முதலின் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்று சமூக அக்கறையுள்ள தரமான படைப்புக்களையும் கொண்டுவர வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள்.
மலையகத்தில் நிகழும் அநியாயத்தை அழகான Rap பாடல் மூலமாகவும், எளிமையான நடிப்பின் மூலமாகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
“அதிகாரம் என்ன செய்யும் உரிமை கேட்போம் வா…”
எம் மக்களின் வலிகளை சொல்லும் அருமையான வரிகளை கொண்ட இந்த பாடல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது..
பல மறுமலர்ச்சி வந்தாலும் நடைமுறையில் வெகு சிலவே மலர்கிறது..இது புரட்சிகர பாடல் என சொல்வதோடு மறுமலர்ச்சிக்கான ஒரு படியாக கருதுகிறேன்..என நடிகர் இயக்குனர் ஆக்கோ ரணில் பதிவிட்டுள்ளார்.
எங்கள் இதயத்தை உடையச் செய்துவிட்டு, எங்கள் உரிமைகளை பரித்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல பேசுதிரியும் அற்ப மூடர்களுக்கு
அவர்களை சார்ந்திருப்போருக்கும்
நமக்கு இவர்கள் தேவையில்லை என
உணர்த்திக்கொண்டே உறவாடி எம் நிலைபுரிய வைத்து நமக்கானதை இனியாவது பேச வைப்போம்.
பொம்மையை நகர்த்துவதுபோல
சப்தமில்லாமல் இவர்களை நகர்த்தி தூக்கி வீசி எல்லாவற்றையும் கழுவித்துடைத்தாற்போல
புதிய வரலாறு படைப்போம் அதையே நம் சுதந்திரம் மொழியாக ஏற்போம்.
திறமையாக பிரித்து கையாளுகிறவர்களை நோக்கி கேள்வி கனைகளை தொடுப்போம் அதிலே வெறுப்பை உமிழ்நீராய் உமிழ்ந்து நம் உரிமைகளை கேட்போம் என வலைதள பிரபலம் ராஜுசுந்தரம் பதிவிட்டுள்ளார்.
ARC Mobile இன் தயாரிப்பிலும் Cv Laksh இன் இசை மற்றும் இயக்கத்திலும் வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .
Production – ARC Mobile
Music , Story , direction – Cv laksh
Singer – Angelica
Rap – Cv laksh, APA Arun Pragash Anthony
Cast -Rajasuntharam Nâvin , Thusha Thusha ThanaRaj Hari Kamali Leesa Dinesh Dii Shanmugavel Sivakanthan,Santhosh & Friends
Assistant Director – Che Jeevan
Art director – Gane Benny
Cinematography – Dev
Editing – Reji Selvarasa
Poster Design – Tn Sathies