விளையாடுவோம்.. வெற்றி பெறுவோம் தர்ஷன் நினைவு போட்டி….அனுமதி இலவசம்

இலங்கை சினித்துறையில் தன் நடிப்பு திறமையால் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்து கொண்டவர் தான் நடிகர் தர்ஷன் தர்மராஜ் அவர்கள்.

சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட “A9″ நாடகத்தில் அறிமுகமாகியிருந்தார் .

அதன்பிறகு அதே ஆண்டில்வெளியான ” பிரபாகரன்” என்ற சிங்களமொழி திரைப்படத்தின் மூலமாக திரைபிரவேசம் செய்திருந்தார்.

குறிப்பாக ‘இனி அவன்’, ‘சுனாமி’ போன்ற திரைப்படங்களிலும் தர்ஷன் தர்மராஜ் பரவலாக அறியப்பட்டவர் .

அதிலும் “இனி அவன்” படத்துக்காக விருதுகளையும் அவர் வென்றுள்ளார். அத்துடன், “கோமாளி கிங்ஸ்” என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார்.

பெரும்பாலான சிங்களமொழி படைப்புகளில் தன் பங்களிப்பை வழங்கிய தர்ஷன் தர்மராஜ் இலங்கை கலைத்துறையில் மறக்கமுடியாத ஆளுமை ஆவார் .

இப்படிப்பட்ட தர்ஷனை விளையாட்டு போட்டி மூலம் கெளரவிக்க நினைத்தது மிகவும் வரவேற்கத்தக்கது,

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் விஜயராஜ் அவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும் .

ஜூன் மாதம் 21 ஆம் திகதி முகத்துவாரம் முத்துவேல் மைதானத்தில் அணிக்கு 8 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்று இடம் பெறவுள்ளது.

கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டிக்கு அனுமதி இலவசம்.

இதில் கலந்துகொள்ளும் அணிகளுக்கு தர்ஷன் தர்மராஜ் அவர்கள் நடித்த படங்களின் பெயர்கள் வைக்கப்படவுள்ளது

நீங்களும் வாருங்கள் .. விளையாடுங்கள்… தர்சன் தர்மராஜ் வெற்றி கிண்ணத்தை வெல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!