சிறப்புக்காட்சிக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டது வெந்து தணிந்தது காடு 

சிறப்புக்காட்சிக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டது வெந்து தணிந்தது காடு.

பல மணித்தியால தொடர் தொடர்பாடல் போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களின் மீள் ஆய்வு அனுமதியுடன் திரைப்படக் கூட்டுத்தாபன பணியாளர்கள் மற்றும் தணிக்கை சபை பணியாளர்கள் ஒத்துழைப்புடனும் திரைப்படம் இன்று பிற்பகல் 4 மணிக்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டது.

இதற்காக முழு மூச்சாக உழைத்த மதிப்பிற்குரிய Anoma Rajakaruna சக இயக்குனரும் சகோதரனுமான சிவராஜ் மற்றும் பூவன் மீடியா குழுமத்திற்கும். அந்நிய தேசத்தில் இருந்தாலும் தூக்கத்தையும் மறந்து ஒவ்வொரு உத்தியோகத்தருடனும் தொடர்பை பேணி உந்திக் கொண்டிருந்த அஜீவண்ணாவுக்கும் மற்றும் ஈழ சினிமா ஆர்வலருக்கும் பெரு நன்றிகள்.

முக்கியமாக சக கலைஞரின் இணைப் பயணம் எந்தளவுக்கு பலம் என்பதை இன்று சிவராஜ் இன் மூலம் உணர்ந்தேன்.

நேற்றிலிருந்து பல அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றாலும் இருந்த மனச்சுமைகளில் பலதைத் தவற விட்டு விட்டேன் பொறுத்துக் கொள்ளவும். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எனது உழைப்புக்கு கொடுத்த ஆதரவுக்கு பெரு நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மட்டுப்படுத்தபட்ட காட்சிக்கு மட்டும் அனுமதி கிடைக்கப்பெற்றதால் பணியாற்றியவர்களுடன் நெருங்கிய வட்டத்திற்கும் முன்பதிவு செய்து கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது.

யாழ் ராஜா திரையரங்கில் 29/01/2023 பிற்பகல் 1 மணிக்கு சிறப்புக்காட்சியாகக் காண்பிக்கப்பட இருக்கின்றது.

சிரமத்தைத் தவிர்ப்பதற்கு கீழே படத்தில் உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!