அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள யாளி | மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை

யாளி முழு நீளத்திரைப்படம் பரணிதரன் சுந்தரமூர்த்தி தயாரிப்பில் Dhakshan Krish இயக்கத்தில் உருவான யாளி முழு நீளத்திரைப்படம் மட்டக்களப்பில் விஜயா திரையரங்கத்தில் 28.08.2022 வெளியாகி மக்கள்மத்தியில் பெரும் வரவேற்பைபெற்றது.

அப்படத்தில் முதல்காட்சி அரங்குநிறைந்த காட்சியை ஏற்படுத்திதந்து ரசிகர்கள் மத்தியில் அதிகளவில்(பெருமளவில்) பேசப்படும் படமாக மாறியது.

அப்படத்தில் வேலைசெய்த அனைவரும் மட்டக்களப்பை சார்ந்த கலைஞர்கள்.முந்திய நடிப்பு ஆற்றலை விட வித்தியாசமான அணுகுமுறையில் இப்படத்தில் உள்ள (கதாப்பாத்திரங்கள் அமையப்பெற்றிருந்தன.) (பார்வையாளர்களினுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான முறையில் அமையப்பெற்று) படத்தினுடைய கதைஅமைப்பில் புதிய விடயங்களை குறிப்பிட்டு பார்க்க கூடிய வண்ணம் இருந்ததாக கூறினார்கள்.

ஆகவே இதே போன்று மட்டக்களப்பு பேசப்படும் யாளி திரைப்படம் மற்றுமொரு காட்சி (திரையரங்குகளில் மீளப்போடுமளவிற்கு) இத்திரைப்படகாட்சிகள் (பார்வையாளர்களை)ஈர்த்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் வேறுவேறு இடங்களிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு இப்படக்குழு தயாராகவுள்ளது.

அந்தவகையில் இன்று (04.09.2022 ஞாயிற்றுக்கிழமை) இயக்குனர் சொந்த ஊரான பொகவந்தலாவை மண்ணிலும் அதே நேரத்தில் மட்டக்களப்பு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க செங்கலடி செல்லம் திரையரங்குகளிலும் மற்றுமொரு காட்சி காட்சிப்படுத்தபட்டது

இதில் வேலைசெய்த அனைவரும் சினிமாவில் (வளர்ந்து வந்து கொண்டிருக்ககூடியவர்களாக இருக்கிறார்கள்.) இத்திரைப்படம் 2½வருட காலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

(இத்துரைப்படம் பிரதானமாக crime story சார்ந்து காணப்பட்டுள்ளது.) இத்திரைப்படம் நம் அன்றாட  வாழ்வில் நடைபெறும் விடயங்களை இயல்பாக காட்டக்கூடிய கதை அமைப்பினை கொண்டுள்ளது.

பட குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!