நமது நாட்டுக்காக பெருமை சேர்க்கும் பலருக்கு விருதுகளும் , சன்மானங்களும் வழங்க வேண்டும்.
அது அவர்களை இன்னும் பெருமை சேர்க்க வழி வகுக்கும்.ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா ? என்றால் இல்லை என்று தான் அர்த்தம்.
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு மங்குளம் கரிப்பட்டமுரிப்பு தங்கை இந்துகா தங்கப்பதக்கம் வென்றார்.
குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.
பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
யாரோ பாடிய பாட்டை யொஹானி பாடி உலக புகழ் பெற்றதற்கு அவருக்கு வீடு , காணி கொடுத்து இந்த அரசு கொண்டாடியது.
ஏன் இந்துகாவை கெளரவிக்க உள்ளங்களுக்கு வருத்தமா? என சமூக வலைத்தளங்களில் கேள்விகளால் நிரம்பி வழிகிறது இந்துகாவின் ரசிகர்களின் பதிவுகள்.
முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்வார்கள்?
இதை பற்றி பாராளமன்றத்தில் பேச வேண்டாமா?