“புத்திக்கெட்ட மனிதர் எல்லாம் ” என்ற ஈழத்து திரைப்படத்தின் கலைஞர்களை மதிப்பளித்தல் நிகழ்வு இன்று பிற்பகல் 4.00 அளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது..
இந் நிகழ்வில் ப.மதனவாசன் (தமிழ்மிரர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும் வள்ளி நிறுவனத்தின் இயக்குநரும்) தலைமைதாங்க பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு கிராமசேவகர்கள்,பிரதேச்சபை உறுப்பினர்கள்,கலைஞர்கள்,அதிபர்,ஆசிரியர்கள்,பொது அமைப்புக்களின் தலைவர்கள்,என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
உண்மையில் இந்த கலைஞர்களை பாராட்டியே ஆகவேண்டும்.கூடவே நாமும் அவர்களை வாழ்த்துகிறோம்.