நள்ளிரவு (15) முதல் ஞாயிறு (16) 12 நண்பகல் வரை மத்திய அதிவேக சாலையின் மீரிகம முதல் குருணாகலை பிரிவை பயன்படுத்த வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
இந் நேரங்களில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்பமாட்டாது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி இன்று திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தப் பகுதி 41 கிலோமீட்டர் தூரங்கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் உள்ளடக்கியதாகும். மீரிகம, நாக்கலாகமுவ, தம்பொக்க, குருணாகல், யக்கஹபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றாடல், சமூக ரீதியான பாதிப்புகளை குறைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். நான்கு ஒழுங்கைகளை கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 4 பில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலையின் இந்தப் பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களுக்குள் இந்த நெடுஞ்சாலைகளின் பணிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
என்ஜாய் மக்களே என்ஜாய்