சர்வதேச சினிமாவில் சத்தமில்லாமல் தனது தடத்தை பதித்துவரும் இளம் சாதனையாளர்.
சுயாதீன திரைப்பட இயக்குனராக (Independent Filmmaker) இலங்கை நாட்டையும் இலங்கை தமிழ் சினிமாவையும் தொடர்ந்து சர்வதேச அரங்கில் பிரதிநித்துவப்படுத்தும் இவர், உலகத்தின் மாபெரும் திரைப்பட விழாக்களில் ஒன்றான Berlin International Film Festival இன் Berlinale Talents 2020க்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கைப் பெண் இயக்குனர் என்ற சாதனைக்குரியவர்.
Big Eyes அமைப்பை ஆரம்பித்து சினிமா சார்ந்த பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார். திரைத்துறைக்கு அப்பால் கிராஃபிக் நாவலாசிரியர், விளம்பரத்துறை எழுத்தாளர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், ஊடகவியலாளர் என பன்முகக் கலைஞராக விளங்குகிறார்.
தற்போது இலங்கையின் முதல் Motion Graphic Novel படைப்பை உருவாக்கி வெளியிட்டு மற்றொரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.