இலங்கையில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய பால்மா தட்டுப்பாடு நிலவலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போதும்கூட பால்மா தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மா விலையை அதிகரிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கவில்லை என கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போது பால்மாவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் இலங்கையில் மிகப்பெரிய பால்மா தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போதும் பால்மா தட்டுப்பாடு தலைதூக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.