R K கவிஷன் ஆக்கோ ரணிலின் இயக்கத்தில் உருவாகியுள்ள Thug Adi – Tamil Rap பாடல் தொடர்பாக இட்டுள்ள பதிவு.
எமது சொந்தங்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அடிக்கடி பறைசாற்றுக்கின்றனர். மலையக மக்களின் வாழ்க்கை தரம் தேயிலை தூர்களுக்கடியிலே நசுங்கிவிடும் என்ற அவப்பெயர் அன்மை காலமாக கொஞ்சம் கொஞ்சமாய் சீர்செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம் தான்.
ஆழப்புதைந்த அப்பனின் சிதை மேல் ஏறி இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவான் என்ற சீவி யின் வரிகள் உண்மையில் வீரியம் மிக்கவையே ஆனால் இன்று மலையகத்தை பொருத்தமட்டில் ஒருபக்கம் கற்ற சமூகம் வளர்ந்து கொண்டே போவது அக மகிழ்ச்சியை அள்ளித்தரும் அதிசயமே.
கல்வியில் மட்டுமல்ல இங்கு கலையிலும் புரட்சிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது. இன்று உலகமே கொண்டாடும் குக்கூ குக்கூ பாடல் நாம் தினம்தோறும் முனுமுனுக்கும் விந்தை என்னவென்று சிந்தித்ததுண்டா? கலையால் எதையும் செய்யலாம் என திமிராய் சொல்வேன்.
சொல்லிசை பாடகர் அறிவின் பாட்டி வள்ளியம்மா மலையகம் என்று கொண்டாடியது பெருமைதான் அதேபோல் அதற்க்கு ஒப்பான கலைஞர்கள் எம்மை சூழவும் இருக்கின்றார்களே அவர்களை தெரியுமா?மலையக மற்றும் யாழ்ப்பாண கலைஞர்கள் இணைந்து தெரிக்கவிட்டிருக்கும் பாடல்தான் thug – அடி பாடல் இப்பாடல் சமகால வன்மைகளை துள்ளியமாக கலையோடு கலந்து நமக்கு காணொலியாக கிடைத்துள்ளது.
இதனை அண்ணன் ஆக்கோ ரணில் இயக்கியிருப்பதுடன் பிரேம் ஜே. ஆர் இசையமைத்து சி.வி லக்ஸ்,பிரியா மற்றும் பிரேம் ஜே. ஆர் ஆகியோர் பாடியுள்ளனர்.வரிகளும் அதற்கேற்ப அமைந்துள்ள இசையும் பாராட்டத்தக்க விஷயமே.
மேலும் கலைஞர்களின் திறமையும் ஒளிப்பதிவும் பாடலுக்கு மென்மேலும் வலுசேர்த்துள்ளது. நிச்சையமாக நீங்கள் அனைவரும் பார்வையிட வேண்டும். எமது கலைஞர்களுக்கும் இக்கலைபடைப்புக்கும் சிறந்ததோர் அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும்.