மலையக சமூகம் போற்றப்பட வேண்டிய கலைஞர் இவர்

கலைஞர் ராமன் கேதீஸ்வரன் தொடர்பாக நீலமேகம் பிரசாந்த் தனது முகப்புத்தக பக்கத்தில் கூறியுள்ளார்.இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து என்பதால் நாம் அதை எமது இணையத்தளத்தில் மறு பதிவு செய்கிறோம்

சர்வதேச வானொலி தினத்தில் நாம் அடையாளப்படுத்தப்பட வேண்டிய நம்மவர்.மலையக சமூகம் போற்றப்பட வேண்டிய கலைஞர் இவர். #ராமன்_கேதீஸ்வரன்.

அக்கரப்பத்தனையை பிறப்பிடமாக கொண்ட இவரின் கலைப்பயணம் 1989 ம் ஆண்டு மேடை நாடக நடிகராக ஆரம்பமானது இவரது வாழ்க்கை.பிறகு மேடை அறிவிப்பாளராக பரிணமித்தார்.

இவரின் தமிழ் உச்சரிப்புக்கு பேராசிரியர் அமரர். சின்னதம்பி காரணமானார். மேலும் பிரபல சட்டத்தரணி கொழும்பு தமிழ் சங்க தலைவர் திருவாளர். ராஜகுலேந்திரனின் அறிவிப்பு நுற்பங்களை கற்றார். பின்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடிப்பு,அறிவிப்பு என கற்றுக்கொண்டார்.

இவரின் ஊடக பயணத்துக்கு அஸிஸ் மன்ற தலைவர் அஸ்ரப் அஸிஸ் அவர்கள் பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு தந்தார். அவரோடு லிந்துல மலையக கலைப் பேரவை தலைவர் திரு.சுகுமார் பல வாய்ப்புகள் தந்து இவரை அறிவிப்பு கலைஞனாக பட்டை தீட்டினார்.

இவரின் ஊடக பயணம் மேலும் பரிணமிக்க தொடங்கியது.அலை கலை வட்டத்தின் நுவரெலியா மாவட்ட தலைவராக ராதாமேத்தா இவரை நியமித்தார் அதனூடாக பல நிகழ்ச்சிகளை மலையகத்திலும்,கொழும்பிலும் நடத்த வாய்ப்பு இவருக்கு கிட்டியது. பிறகு எப்படி சரி ஊடகத்திற்கு நுழைய வேண்டும் என்ற ஆசை அரிக்க மு.குலேந்திரன்ஊடாக ( தற்போது சக்தி டீ.வி பணிப்பாளர் ) ரூபவாஹினிக்கு சந்தைப்படுத்தல் விரிவாக்கல் பிரிவின் அறிவிப்பாளராக சென்றார்.

பிறகு இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிரச என்ற ஊடக பெயர் வைத்த நிமால் லக்ஷபதி ஆராச்சி அவர்களின் நெருங்கிய தொடர்பு இவருக்கு கிடைத்தது.அவரூடாக தொடர்ச்சியாக ரூபவாஹினி வெளிகள அறிவிப்பு செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது.பிறகு அறிவிப்பாளர் எஸ்.எம்.ரவி மூலமாக தென்றல் வானாலியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்தபட்டார்.

வர்ணனையாளராக தன்னை உயர்த்திக்கொண்டார்.இவரோடு சீதாராமன்.ஏ.எல்.ஜபீர்.முத்தையா ஜெகன்மோகன்.சித்தார்த்தராஜா நாகபூசனி ஆகியோர் பல விடயங்களை கற்றுக கொடுத்து உத்வேகம் தந்து உற்சாகம் ஊட்டினார்கள் . நாட்டில் யுத்தகாலமாக இருப்பினும் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்.ஊடக பயணத்தில் சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்தார். பிறகு வசந்தம் டீ.வி ஆரம்பித்ததும் திரு.குலேந்திரன் உடன் சென்று .

அங்கு தயாரிப்பு உதவியளாராக,ஒருங்கிணைப்பாளராக,வர்ணனையாளராக சில காலம் கடமையாற்றினார்.இவரின் ஊடக பயணம் 30 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று இவர் அறிவிப்பால் இலங்கையில் கால் பதிக்காத இடங்களே இல்லை.புகழ் பெற்ற ஆலயங்கள் தொண்டமனாறு செல்வச்சந்நதி.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வரம், வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலயம், விஸ்மடு நாகதம்ரான் ஆலயம், கிளிநொச்சி முருகன் ஆலயம், மட்டு.மாம்மாங்கேஸ்வரம், பெரிய போரதீவு காளியம்மன் ஆலயம்,கல்முனை முருகன் ஆலயம்,மண்டூர் முருகன் ஆலயம்,சித்தாண்டி முருகன் ஆலயம்,உடப்பு திரௌபதி ஆலயம், முந்தல் அம்மன் ஆலயம்,முன்னேஸ்வரம்,மாத்தளை நகர் அம்மன் ஆலயம்,ஏழுமுக காளியம்மன் ஆலயம்,பதுளை ரொக்கில் காளியம்மன் மற்றும் பேச்சியம்மன்,இரத்தினபுரி சிவன் கோவில் தவிர மலையகத்தில் பல ஆலயங்களில் இவர் குரல் ஒலித்துள்ளது. இவர் அறிவிப்பாளர் மட்டுமல்ல நடிகரும் கூட தொலைக்காட்சி தொடர் இதயம் (டி.என்.எல்) கௌதமி(நேத்ரா) ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். வடக்கின் வசந்தம்,வடக்கின் உதயம்,தினு பிம அபே கம கலைஞர்கள் நிகழ்வு,முதலாவது தெற்காசிய கடற்கரை போட்டி தொகுப்பு,கிரிக்கெட் உலக கிண்ண வர்ணனை,முதலாவது பெட்மிட்டன் தமிழ் மொழி வர்ணனை, இரண்டு முறை இரவு நேர கார் பந்தய வர்ணனை,தேசத்தின் மகுடம், இரண்டு முறை உலங்கு வான்னுருதியில் நேரலை அறிவிப்பு.

என இவரின் சாதனைகள் ஏராளம். கலை காவலன் எனும் விருது மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரங்களில் இவருக்கு கிடைக்கப்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு விருது,கதிர்காம விருது, சாகித்திய விருது என பல விருதுக்கு சொந்த காரர் இவர் இப்போது நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளராகவும்,அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் ஊடக பொறுப்பாளராகவும்,இலங்கை இந்திய மேம்பாட்டு மய்யத்தின் சர்வதேச இணைப்பாளராகவும் காணப்படுகின்றார்.

இந்த கருத்தை பதிவு செய்த நீலமேகம் பிரசாந்த்க்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!