வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிய கலைஞ்சர்களின் நேர்காணல்களை நாம் அடிக்கடி வழங்கி வருகிறோம்.இந்த நேர்க்காணல் வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைஞ்சர் அப்சான் சக்ஹீர் எமது லங்காடாக்கிஸ் இணையத்தளத்திட்கு வழங்கிய சிறப்பு பேட்டி
1 .உங்களது ஊடகப்பயணம் எங்கு ஆரம்பமாகியது ?
சக்தி fm 2014
2. சக்தியில் பணியாற்றிய அனுபவம் பற்றி?
2014 ல சக்தி fm ல journey ah தொடங்கினன். 1st overnight show ராத்திரியின் சொந்தக்காரன் நல்ல பேர் கிடைச்சது. அப்றம் நான் கீர்த்தனன் அண்ணா சேர்த்து மாலை எக்ஸ்பிரஸ் அது வேற லெவல். ஆனந்த இரவு, அந்த நாள் ஞாபகம் இது இன்னொரு Dimension கு கொண்டு போச்சு. சக்தில இருக்கறவங்கல பாத்தா போதும்ன்னு இருந்த எனக்கு அவங்க கூட work பண்ணினது dreams comes true moment தான்.
3.இரவு நேர நிகழ்ச்சிகளில் நாயகனாக நீங்கள் இருந்த காலம் பற்றி
நாயகனா ஆமா தென் பாண்டி சீமையிலே ஊர் தூங்கும் வேலையிலே…. அது நான் expect பண்ணாத ஒன்னு, overnight show ல, show பண்ணி பழக தான் போடுவாங்க அந்த பழக்கம் வழக்கம் ஆகிட்டு அந்த டைம் listeners தான் அந்த show hit ஆனதுக்கு காரணம் வந்து தெறிக்க உடுவாங்கSpecially பொண்ணுங்க
4 . அபர்ணா மற்றும் கணா உங்களுக்கு வழங்கிய ஒத்துழைப்பு பற்றி
கணா அண்ணா என்னால என்னைக்குமே மறக்க முடியாத ஒருத்தர். Very supportive person. தலக்கனம் இல்லாத மனுஷன். ஒரு தடவ overnight show ல office 4n ல நெறைய நேரம் நேயரோட பேசி அபர்ணா அண்ணாட மாட்டிகிட்டன் அப்போ கணா அண்ணா தான் காப்பத்தி விட்டார். இப்டி எத்தனையோ!அபர்ணா அண்ணா தான் அந்த நாள் ஞாபகம் கேட்டுட்டு நீ இனி Saturday morning வணக்கம் தாயகம் செய்ன்னு show ல மட்டும் promote பண்ணினார்.
5 கேபிடல் வானொலி பிரவேசமும் சக்தியில் நீங்கள் மிஸ் பண்ணிய விடயங்களும் ( கேபிடலில் கிடைக்காதவை )
கேப்பிடல் zia அண்ணா தந்த வாழ்க்கை. சக்தில படிச்சத வச்சி அங்க work பண்ணினன். ஆனா சக்தி ல பண்ண முடியாத சில வேலைகள Capital ல பண்ணினன் எல்லாரும் சேர்த்து ex: jingles, productions அப்டி அதெல்லாம், இதுக்கெல்லாம் zia அண்ணா ரொம்ப supportive.
6 உங்கள் நேயர்கள் உங்களை மிஸ் பண்ணிய சந்தர்ப்பம்
பண்றாங்களான்னு தெரியல்ல but சில பேர் fb ல chat பண்ணி விசாரிப்பாங்க tnx தங்கங்களே
7 சக்தி ,கேபிடல் ,ஸ்டார் உங்களது முழு திறமையும் நிரூபித்த இடம் எது?
மூன்றும் தான் சக்தி ல கத்துகிட்டன், capital ல கத்துகிட்டே work பண்ணினன், star tamil work பண்ணினன். ஸ்டார் தமிழ்ல hoshiya அக்கா தான் செம்ம competitor அடுத்த generation க்கும் சேர்த்து அறிவு வச்சிருக்காங்க.
8.வானொலி விருதுகளில் பக்கச்சார்பு உள்ளதாக தகவல்..உண்மையாக இருக்கோமோ?
பக்க சார்பு இல்ல பக்கா sharpu. எனக்கு நல்லா புடிச்சவங்களுக்கு award கிடைக்கிறதா ல அத பத்தி பேச விரும்பலை. ஆனாலும் juries, quality products ரெண்டுமே கவனிக்க படனும்.
9. சக்தி டிவியில் பணியாற்றிய அனுபவம்?
சக்தி டிவி ல விச்சு பிச்சு show தான் பண்ணினன் விக்கி அண்ணா கூட சேர்த்து tharshana produce பண்ணினாங்க அது நல்ல reached தான்.
10. நீங்கள் வானொலிகளில் உங்கள் நகைச்சுவை பேச்சால் பலரை கவர்ந்தீர்கள்.தற்போது வானொலிகளில் நகைச்சுவையாளர்கள் யாரவது உங்களோடு ஒப்பிட முடியுமா?
இல்ல, நானே பெருசா பண்ணல சும்மா keka pekka ன்னு சிரிச்சுண்டு இருப்பன். இப்ப radio ல எவ்வளவோ நல்ல entertainment show பண்றாங்க. அடுத்தது ஒப்பிட்டு பாக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரள.
11. உங்கள் குரலையும் ,உங்கள் நகைச்சுவையான பேச்சையும் நாம் இனி இப்போது வானொலியில் கேட்கலாம்?
நல்ல கேள்வி ஆனா யாரு வேல தருவா தங்கமே
வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைஞ்சர் அப்சான் சக்ஹீர்க்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.