”பார்த்தீபா”வைப் பார்த்தேன்.மனம் திறந்தார் மணிவானன்

இயக்குனர், அபர்ணா சுதனின் இயக்கத்ததில் உருவாகியுள்ள பார்த்தீபா திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்றுதான் கிட்டியது. எமக்கான திரையரங்குகளை பெறுவது என்பது பெறும் சவாலாய் இருக்கும் நிலையில் எப்படி அந்தத் திரையரங்குகளை எமது சினிமாவுக்காக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எமக்கு காண்பித்திருப்பது தான் பார்த்தீபாவின் முதல் வெற்றி என நினைக்கின்றேன்.

இந்தியத் திரைப்படங்களுக்கு நிகராக எமது திரைப்படங்களை திரையிடுவதில் திரையரங்களுக்கு இருக்குதம் தயக்கத்தை இலகுவாக தகர்த்தெறிந்து திரையங்குக்குள் இலகுவாக புகுந்துக்கொண்டுள்ளது பாத்தீபா. இரண்டரை அல்லது 3 மணித்தியால சினிமாவுக்குதானே இடம் தர முடியாது. முதல் படக் காட்சிக்கும் அடுத்த படக் காட்சிக்கும் இடையில் உள்ள அந்த 1 மணித்தியாலத்தை எமக்கு தாருங்கள் என்பது தான் பார்தீபாவின் மார்க்கெட்டிங் என நினைக்கின்றேன். திரையரங்கம் கிடைக்கவில்லை என்பதை கிடைக்கவில்லை என்பதை விட எப்போது திரையரங்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிந்து அதற்கேற்ப கதையைத் தயார்படுத்தி அதைக் காட்சிப்படுத்தியுள்ள இயக்குனர் அபர்ணா சுதனுக்கு ஒரு சபாஷ். இனிவரும் காலங்களில் நாமும் இதைப் பின்பற்றுவது சிறந்தது என நினைக்கின்றேன்.

அதையும் தாண்டி ஒரு மணித்தியாலத்துக்குள் என்ன கதையை சொல்லலாம், குறைந்த பட்ஜெட் படமொன்றை எப்படி செய்யாலாம் என்பதை சரியாக இனம் கண்டு கதையைத் தெரிவு செய்திருக்கின்றார் இயக்குனர்.
மற்றும் கதை நகர்வு, நடிப்பு, இசை, பாடல் வரிகள், ஒளிப்பதிவு, ஒலிச்சேர்க்கை, படத்தொகுப்பு என தமது அயராத உழைப்பை வழங்கியுள்ள அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
இயக்குனர் அபர்ணா சுதனின் முதல் திரைப்பட முயற்சியே திரைக்கு வந்து விட்டது என்பது பெரிய வெற்றியே, தொடரும் உங்கள் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

நாம் அனைவரும் பார்த்து பாராட்ட வேண்டிய ஒரு படைப்பு கட்டாயம் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!