மலேசியாவில் இடம்பெறவுள்ள 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 நிகழ்வில் பங்கேற்பது தொடர்பான செய்தி:
11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கையில் இருந்து பங்கேற்கும் அணியில் மலையகத்தை சார்ந்த அருணாசலம் லெட்சுமணன் அவர்களும் ஆய்வாளராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இம் மாநாட்டில் அமர்வு ஒன்றில் “இலங்கையில் அறுபதுகளுக்கு பின்னரான மலையக நாடக முன்னெடுப்புகள்” எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் பிரதான அமைப்பாளராக சமூக, கலை, இலக்கிய எழுத்துத்துறைகளில் பணியாற்றும் இவர் கட்டபுலா, ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின் அதிபருமாவார்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம். உலகத் தமிழ்ச் சங்கம், கொழுப்புத் தமிழ்ச் சங்கம், போன்ற அமைப்புகளில் சர்வதேச தமிழியல் மாநாடுகளில் பங்கேற்று மலையக கலை, இலக்கியங்கள் குறித்த ஆய்வுரைகளை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு 11வது மாநாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் மாணவராக பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழகம் (வெளிவாரி) தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றில் பயின்றதோடு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் வெளிவாரியாக பாடநெறியினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு நிகர் சமூக கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் மேலும் தேசிய சர்வதேசிய கலை, இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்பு 0771654372