மக்கள் செல்வனுக்கு பாட்டெழுதிய ராகுல்
ராகுல் இன்று முழு இலங்கை சினிமா படைப்பாளிகளும் பேசும் பெயர்.ராப் மெஷின் இசை குழுவின் படைப்பாளி
நூவரெலியாவில் பிறந்த ராகுல் எதை சாதித்தார் என்று பலருக்கு தோன்றலாம்.காரணம் இருக்கிறது.அதுவும் தனது முதலாவது கோலிவுட் வாய்ப்பு.
டீ கடை பசங்க மூலம் பாட்டெழுத ஆரம்பித்த ராகுலின் கலை பயணம் அவரை சிந்துபாத் திரைப்படம் வரை கொண்டுவந்துள்ளது.
இலங்கையில் பலர் தென்னிந்திய திரைப்பட வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.அவர்களில் பலர் இன்னும் சாதித்து கொண்டு இருக்கிறார்கள்.
ராகுலுக்கு இந்த வாய்ப்பு ADK மூலம் கிடைத்ததாக ஒரு பெட்டியில் தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.
இயக்குனர் அருண் குமாரின் இயக்கத்தில் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இரு படங்களில் நடித்துள்ளார்.சிந்துபாத் இந்த கூட்டணியின் மூன்றாவது படம்.இந்த படத்தில் ROCKSTAR ROBER என்ற பாடலை எழுதி இருக்கிறார் ராகுல்.
ராகுலின் இந்த பாடல் இணையங்களில் வைரலாகி வருகிறது.தொடர்ந்தும் இன்னும் பல பாடல்களை எழுத www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.