தமிழ் மக்கள் இணையத்தின் அரசியல் நகர்வும் புதிய அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பமும்

அரசியல் காட்சிகள் புதிது புதிதாக தொடங்குவது மக்களுக்கு நல்லது தான்.

அவர்களின் கொள்கைகளில் மாற்றங்கள் ,புதிய திட்டங்கள் ,தங்களுக்கென கொள்கைகள் என சமத்துவ அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும் விடயங்கள் வரவேற்கத்தக்கது.

குறிப்பாக வடக்கு அரசியல் வாதிகள் மலையக அரசியல் தலைமைகளுடன் கூட்டு சேர்வதில்லை.அது மொழி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் அவ்வாறு கூட்டணி வைப்பதில்லை.

ஆனால் ஒரு சில தனி நபர் அரசியல்வாதிகள் தங்கள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு மலையக அரசியல் தலைவர்களுடன் கூட்டணி வைப்பதில்லை.

இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைக்க வந்தவர் தான் சண் குகவரதன்.எந்த விதமான குறுகிய சுய லாப சிந்தனையும் இல்லாத மனிதர்.

அவருக்காக நாம் கடைக்கு போவதாக யாரவது நினைத்தால் அது நினைப்பவர்களின் அடிப்படைவாதத்தை காட்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தலைமையில் அவரது கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர்களான ஊவா மாகாண அமைச்சர் கௌரவ. எம்.செந்தில் தொண்டமான், பிரதி பொது செயலாளர் திரு.ஜீவன் தொண்டமான், கௌரவ.நிதி செயலாளர் திரு.ரமேஸ்வரன் ஆகியோருடன் கொழும்பிலுள்ள சௌமிய மூர்த்தி பவனில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் தமிழ் மக்கள் இணையத்தின் தலைவரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் தலைமையில் அதன் அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினர்களான திரு.ஏ.சிவசங்கர், திரு.ஏ.சஜீவானந்தன், திரு.ஜே.நிரோஷ்காந்,திரு.ஆர்.ரூபன் மற்றும் இளைஞர் இனைய தோழர்களும் தற்போதுள்ள நாட்டின் அரசியல்கள நிலைமை தொடர்பாக சுமார் ஒருமணி நேரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க துடிக்கும் சண் குகவரதன் உள்ளிட்ட தமிழ் மக்கள் இணையத்திற்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!