இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல அமைப்புகள் தங்களுக்கான பணிகளை செய்ய தவறிய காலம் தான் இலங்கை இசை துறை தந்து அடையாளயத்தை அழித்த காலம்.
இளநகை தமிழ் இசை கலைஞ்ர்களுக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என்ற சிந்தனை பாடகர் கே மகிந்தகுமாருக்கு ஏற்பட உருவாகிய அமைப்பு தான் இலங்கை தமிழ் இசைக் கலைஞர் சங்கம்.
இன்று தனது பொதுக்கூட்டத்தை கொழும்பில் நடத்தியது.இதில் ஏராளமான தமிழ் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இவர்களின் இலக்கு ,நோக்கம் ,கனவு எல்லாவற்றுக்கும் மேல் கலைஞர்கள் படும் கஷ்டங்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது.
பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.கலைஞர்கள் தங்கள் வாழக்கை சுமையை கடந்து செல்ல சகல விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
எது எப்படியோ முக்கிய சில பாடாகர்களையும்,இசையமைப்பாளார்களையும் கூட்டத்தில் காண முடியவில்லை.
மொத்தத்தில் புதிய இலங்கை தமிழ் இசைக் கலைஞர் சங்கம் தனது பெரிய பங்களிப்பை இலங்கை தமிழ் இசைக் கலைஞர்களுக்கு வழங்கும் என்பதில் ஐயமில்லை.
புதிய சங்கத்திற்கு இலங்கையின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் நம் நாட்டின் ஒரே ஒரு இணையத்தளமான இன் வாழ்த்துக்கள்.