பல அரச தலைவர்களுக்கு பல திறமைகள் இருக்கும்.நமது நாட்டிலும் அரச தலைவர்கள் இருக்கிறார்கள்.
சிலருக்கு அறிவு சார்ந்த விடயங்களிலும் ,சிலருக்கு பேச்சு சார்ந்த விடயங்களிலும் ,சிலருக்கு பாடல் சார்ந்த துறையிலும் திறமை இருக்கும்.
அந்தவகையில் நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கவிதை மற்றும் பாடல்களில் அதிக ஈடுபாடு உள்ளதை நாம் அறிவோம்.
அந்த விதத்தில் அவர் கலந்து கொண்ட நேரடி நிகழ்ச்சி ஒன்று கடந்த வார இறுதியில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபல இசை அமைப்பாளர் ஒருவர் ஜனாதிபதியுடன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
பல வரலாறு சிறப்பு மிக்க பாடல்களை ஜனாதிபதி பாடினார்.இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி எதிர்வரும் 22 ஆம் திகதி இரவு 10 20 க்கு தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்பாகவுள்ளது .
நாமும் நிகழ்ச்சியை பார்த்து எமது ஜனாதிபதிக்கு உள்ள திறமையை பாராட்டுவோம்.எமது ஜனாதிபதிக்கு இலங்கையின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் நம் நாட்டின் ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk குடும்பத்தின் வாழ்த்துக்கள்.