எதா ரே” திரைப்படத்தின் திரையிடல் விழா

மில்டன் மல்லவாரச்சி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “எதா ரே” (அன்று இரவு) திரைப்படத்தின் திரையிடல் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டின் பல பிரபல நடிகர்கள், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மில்டன் மல்லவாரச்சி அவர்களின் கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் ரோஷான் ரவீந்திரா நடித்துள்ளார்.

‘மாரியா’, ‘தர்ம யுத்தய 02’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண ஜெயவர்த்தன இத்திரைப்படத்தை இயக்கியுள்ளதுடன், சன்ன தேசப்பிரிய ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தீவு முழுவதிலும் உள்ள பல திரையரங்குகளில் ‘எதா ரே’ திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!