“ஜடம்” மனித உணர்வுகளின் ஆழமும் அர்ஷாத் நிஸாத்தின் அர்த்தமுள்ள ஆதங்கமும்

இலங்கைத் தமிழ் திரைப்பட உலகில் புதிய முயற்சியாக உருவாகி வரும் படம் “ஜடம்” (JADAM) தற்போது தயாரிப்பில் உள்ளது.

இப்படத்தை அர்ஷாத் நிஸாம் எழுதி இயக்கியுள்ளார்.

மனித உணர்வுகளின் ஆழமும் சமூக நிஜங்களின் சிக்கல்களும் இணைந்து விரியும் வித்தியாசமான கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருவதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை வினோ த்ரோன் கவனிக்கிறார்.

தொகுப்பை கே.எஸ். கண்ணன் மேற்கொள்கிறார்.

உதவி இயக்குநர்களாக கவுஷி நிரோஜா மற்றும் வினோஷ் காந்த் இணைந்துள்ளனர்.

ஸ்டேஷன் ரிச்சர்ட்சன் கேமரா உதவியாளராகவும், நிரா சாமி – நிரஞ்சன் டிசைனராகவும், அபினு ஒப்பனையாளராகவும் பணிபுரிகின்றனர்.

படத்தில் சாந்தா நா ஜேவி, விக்னேஷன் தேவராஜ், வினோஷ் காந்த், ஷமிலா நிஸார் மற்றும் சிறுவன் பிரணுஹசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமூகத்தின் அடிநிலையில் மறைந்து கிடக்கும் உண்மைகளையும், மனித மனத்தின் பல அடுக்குகளையும் வெளிப்படுத்தும் முயற்சியாக “ஜடம்” உருவாகி வருகிறது.

இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய பார்வையை உருவாக்கும் கலைநயமிக்க படைப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!