ஆடல் பாடலுடன் நம் நாட்டு கலைஞர்களின் மாபெரும் இசைக் கதம்ப நிகழ்ச்சி

கலை ஶ்ரீ கலைமன்றம் நடத்தும் “பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்” நிகழ்வில் மூன்று முக்கியஸ்தர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும் , கலைஶ்ரீ கலை மன்றமும் இணைந்து வழங்கும் “பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்” மாபெரும் இசை நடன நிகழ்வு 2025.12.19ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு 11 அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களின் ஆடல்களும் பாடல்களும் இடம்பெறவுள்ளன.

தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் நடைபெறும் இந்த நிகழ்வில், “பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்” என்ற நிகழ்வை ஆரம்பிப்பதற்கும் சிறப்பாக நடத்துவதற்கும் உதவியாக மூன்று பிரமுகர்கள் இருந்திருக்கிறார்கள்.

அந்த மூன்று பிரமுகர்களையும் கலைஶ்ரீ இந்த மேடையில் வைத்து கௌரவிக்க இருக்கிறார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் கலைஞருமான ஜோசப் பெர்ணாண்டோ,

கொழும்பு கலாசார மன்றத்தின் பொருளாளரும் கலைஞருமான M. N. M. நசார்,

ஊடகவியலாளரும் கலைஞருமான கே. ஈஸ்வரலிங்கம்

ஆகிய மூன்று பிரமுகர்களும் இங்கு கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

இவர்களைப் போன்று மேலும் பல கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இங்கு கௌரவிப்படவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!