40 வருட ஊடக சேவைக்கு மகுடம் யூ.எல்.யாகூப்க்கு ஊடக வித்தகர் விருது

சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய தொலைக்காட்சியின் நேத்ரா மற்றும் செனல் ஜ அலைவரிசையின் நடப்பு விவகார பணிப்பாளருமான யூ.எல்.யாகூப் அவர்களின் சேவை நாம் அறிந்ததே.

இன்று அவர் ஒரு பணிப்பாளர் நிலைக்கு உயர்ந்த நிலையில் அவரது கடின உழைப்பும் , சிறந்த தலைமைத்துவ பண்பும் அவரின் வெற்றிக்கு காரணம்.

அவரது 40 வருட ஊடக சேவை உன்மையில் மகத்தானது.

கிழக்கு மாகாண சபை நடத்திய சிறப்பு விருது விழாவில்
“ஊடக வித்தகர் விருது 2025” விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தனசேகர அவர்களால் இன்று (ஒக்டோபர் 10ஆம் நாள்) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டது

அவரது சேவை இன்னும் ஊடகத்துறைக்கு கிடைக்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!