மெளன மொழியின் டப்பிங் பணிகள் நிறைவு
சனாதனன் சனாவின் இயக்கத்தில் உருவாகும் படைப்பு மெளன மொழி
இந்த படத்தை உருவாக்க இயக்குனரான சனாதனன் சனா படும் சிரமம் நாம் நாம் அறிவோம்
எப்படி என்றால் முகப்புத்தகம் மூலமாக தான் . இந்த படத்திறகாக தான் படும் கஷ்டத்தை அவர் உடனே பதிவிடுவார்
இன்றைய தினம் அவரது மெளன மொழியின் டப்பிங் பணிகள் இன்று நிறைவு பெற்றது.
இது தான் அவரது பதிவு இலங்கையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கவும் வெளியிடவும் கலைஞர்கள் பல வருடங்கள் சிரமப்படும் நிலையுள்ளது. அந்த வகையில் இரண்டு வருட எமது கூட்டு முயற்சியில் உருவான “மௌன மொழி” திரைப்படம் இன்றுடன் டப்பிங் பணிகளை நிறைவு செய்து தனது இறுதி வடிவத்திற்குள் செல்ல இருக்கிறது. இசைக்கோர்ப்பு பணிகள் முடிவடைந்ததும் வெளியீட்டு திகதியை அறிவிக்கிறேன். எனது இந்த நீண்ட கடும் போராட்டத்தில் துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ♥️♥️♥️
எது எப்படியோ நாம் அவருடன் தொடர்ந்து பயணிப்போம் வாழ்த்துக்கள் சனா
