தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளர் சிவானந்த ராஜா முறைப்பாடு பதிவு செய்ய சற்றுமுன் CID க்கு விஜயம்

பாடசாலை மாணவி அம்ஷிகா தற்கொலை விவாகரம் தொடர்பாக ராஜேஸ்வரி கல்வி நிலையத்தின் நிறுவனர் சிவனந்தராஜா அவர்கள் சற்று முன் கோட்டையில் அமைந்துள்ள CID க்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய வந்துள்ளார்
இந்நிலையில் அவர் CID க்கு வருகை தந்தன் காரணம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சிவானந்தராஜா , மாணவி ஹம்ஷிகாவின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தன்னையும் , தனது குடும்பத்தினரையும் , தனது அரசியலையும் தொடர்புபடுத்தி நிறைய விமர்சனங்கள் வந்ததால் அது தொடபாக தெரிவிக்க வந்ததாக கூறினார்