கொழும்பு பிரதேச செயலக கலைஞர்கள் அதிகார சபை (கலாக்கரு பலமண்டலய) ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரைப் புத்தாண்டு விழா நேற்று (05 – 05 – 2025) குணசிங்கபுர சவுண்டஸ் விளையாட்டு மைதானத்தில் (பிரயிஸ் பார்க்) வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வில் அப்பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்ட துடன். பல போட்டிகளிலும் பங்கு பற்றி மகிழ்ந்திருந்தனர்.



இந்நிகழ்வுக்கு கொழும்பு பிரதேச செயலகத்தின் செயலாளர் சந்தருவான் அநுருத தலைமை தாங்கியதுடன் பிரதி செயலாளர், சுரஞ்சித் சமீர, மேல் மாகாணத்துக்கான கலாச்சார உத்தியோகத்தர் திலிப் அலுத்வத்த, கொழும்பு பிரதேச செயலகத்துக்கு கலாச்சார உத்தியோகஸ்தர் கிறிஸ்ரி றோஸ், மற்றும் கலாச்சார அதிகார சபை தலைவர் சிந்தக பத்திரன செயலாளர் திமித்ரா ரட்நாயக்க என்பவர்களுடன் பல கலைஞர்களும் கலந்துக் கொண்டனர்.



குறிப்பாக இந்நிகழ்வுக்கு சிறப்பு அதியாக சகோதர மொழி பிரபல கலைஞர்களான பாலிதத்த சில்வா மற்றும் சுகித் சமீரவும் கலந்து கொண்டிருந்தார்கள்.


பல்வேறுப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பங்குபற்றிய வர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
தகவல். A.K.இளங்கோ
புகைப்படங்கள் M.F.M.நசார்