ஈழவாணியின் காப்பு நூல் வெளியீட்டு விழா நாளை

இந்தியா ,தமிழ்நாடு , பூவரசி வெளியீடுகள் பதிப்பக நிறுவனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையுடன் இணைந்து நடத்துகின்ற ஈழவாணியின் காப்பு எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 7 ஆம் திகதி நாளை மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு அரச ௧௫ம
மொழிகள்‌, சமூக மேம்பாடு மற்றும்‌ இந்து
சமய கலாசார அலுவல்கள்‌ அமைச்சர்‌ மனோ கணேசன்‌ பிரதம அதிதியாக
கலந்து கொள்ளும்‌ இந்த விழாவில்‌ உலகத்‌ தமிழ்‌ பண்பாட்டு இயக்கத்தின்‌
தலைவர்‌ தே. செந்தில்வேலவர்‌ தலைமை தாங்குவார்‌ ..
இலங்கையைச்‌ சேர்ந்த பெண்‌ எழுத்தாளர்கள்‌ 50 பேரின்‌ சிறுகதைகள்‌
ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு தொகுப்பு நூலாக இந்த காப்பு நூல்‌ வெளிவரஇருக்கின்றது. இந்த நூலின்‌ முதல்‌ பிரதியை இடம் IDM நிறுவனத்‌தின்‌ தலைவர்‌ ஜனகன்‌ விநாயகமூர்த்தி ,பூவரசி பதிப்பகத்தின்‌ தலைவி ஈழவாணியிடமிருந்து பெற்றுக்‌ கொள்வார்‌.

இந்த விழாவில்‌ இலக்கியத்துறைக்கு பணியாற்றிய ஐந்து சிரேஷ்ட பெண்‌ எழுத்தாளர்கள்‌ கெளரவிக்கப்படவுள்ளனர்
இவ்‌ வெளியீட்டு விழாவில்‌ சிரேஷ்ட எழுத்தாளர்‌ சிவலிங்கம்‌ சதிஷ்குமார் ,கொழும்பு மாநக்ர சபை உறுப்பினரும்‌ ஜனநாயக மக்கள்‌ முன்னணியின்‌
உப்‌ தலைவருமான பாஸ்கரா, திருமதி வசந்தி தயாபரன்‌, தினக்குரல்‌ பாரதி ராஜநாயகம்‌, சிரேஷ்ட ஒலிபரப்பாளர்‌ அபர்ணா சுதன்‌ திருமதி
கீதா கணேஷ்‌, ஷர்மிளா வினோதினி உட்பட பலரும்‌ உரையாற்றுவார்கள்

புவரசி பதிப்பகத்தின்‌ உரிமையாளர்‌ ஈழவாணி ஏற்புரையை நிகழ்த்துவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!