மலையக மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பாலர் பாடசாலை சிறார்களுக்கான கலை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை 05.01.2025 அன்று லக்க்ஷபான வாழமலை பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
எட்டு பாலர் பாடசாலை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட சிறார்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு பூரண அனுசரனை தந்திருந்தது கொழும்பு கர்ணன் அறக்கட்டளை அமைப்பு.
ஆதரவு தந்த அனைவருக்கும் மலையக மக்கள் மன்றம் தனது நன்றிகளை பகிர்ந்து கொள்கிறது.
தொடர்ந்தும் மக்கள் சேவையில் மலையக மக்கள் மன்றம்.
மலையக மக்கள் மன்றம் தொடர்ந்தும் அவர்கள் சிறப்புற இயங்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்…..