அன்று FM பணிப்பாளர் , இன்று DPF செயலாளர்
நாளை பாராளுமன்ற உறுப்பினர்..!
பரணி இலங்கை ரேடியோ ரசிகர்கள் அறிந்த பெயர்.
காலை , மாலை , விளையாட்டு என எந்த நேரத்திலும் கலக்கி ரேடியோ ரசிகர்களை கவர்ந்தவர் .
வெற்றி , சூரியன் , வர்ணம் , தமிழ் என எல்லா ரேடியோ ரசிகர்களின் ஹிரோ நம்ம பரணி .
அரசியலில் குதித்த பரணிக்கு அதிர்ச்சியான அதிஷ்டம் இப்போது கிடைத்துள்ளது .
அது தான் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி .
இது சாதாரண பதவி அல்ல . ஒரு கட்சியின் மிக முக்கிய பதவி .
ஏற்கனவே கேகாலை மாவட்ட அமைப்பளரான பரணிக்கு அடுத்த வெற்றி காத்திருக்கிறது .
அது தான் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி .
அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் . அப்படி வெற்றி பெற்றால் தமிழ் ரேடியோ அறிவிப்பாளர்களில் பாராளுமன்றம் சென்ற முதலாவது RJ என்ற பெருமையை பெறுவார் .
இதற்கு முதல் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மூவர் பாராளுமன்ற உறுப்பினர்காளாகியுள்ளனர்.
ஸ்ரீ ரங்கா , மரிக்கார் , முஷாரப் ஆகியோர் .