16.09.2024. BMICH இல் சரவதேச மனித உரிமைகள் அமைப்பு,
சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் தேசிய கலை அரண் ஏற்பாட்டில் “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் அரச அங்கீகாரம் பெற்ற விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது.
அதில் ஹட்டன் கிளவட்டன் பிரிவு சதாசிவம் & ராஜலஷ்மி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பரமானந்தன் வசிகரன் (சிறந்த நடிகருக்கான) “கலாவிபுஷண” லங்கா புத்ர, தேசபந்து என்கின்ற பட்டத்தை பெற்று மலையகத்திற்கு பெருமைச்சேர்துள்ளார் இவர் கிளவட்டன் ஆரம்பபிரிவு வித்தியாலயம்…..கார்பெக்ஸ் த.ம.வி.. நோட்டன் கணபதி. த.ம.வி பழைய மாணவருமாவார்.
இந்த விருதை தவிர சம்யுக்தா விருது வழங்கும் போட்டியில் சிறந்த நடிகருக்கு வசீகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மென் மேலும் பல சாதனைகள் படைக்க எமது வாழ்த்துக்கள்