இன்று வெளியாகும் MISSION JAFFNA இல்
அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்
ஊரையும் , பெயரையும் வைத்து திரைப்படங்கள் பெயர்கள் வரும் போது அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேட்பு கிடைப்பதுண்டு.
அப்படி பல படங்கள் சுருண்டதும் உண்டு . ஆனால் தற்போது Jaffna வில் நடக்கும் பல Mission கள் சமூகத்தை குட்டிசுவராக்கும் நிலையில் Jaffna வில் எதோ ஒரு Mission நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் இந்தப்படத்திற்கு MISSION JAFFNA என பெயரிடப்பட்டுள்ளது .
இயக்குனர் அருள் செல்வத்தை பற்றி சொல்லி ஆக வேண்டும் . அவருடன் ஒன்றாக பணியாற்றிய ஸ்டார் தமிழ் டிவி யின் நிகழ்ச்சி முகாமையாளர் பத்மராஜ் பிரேம் ஆனந்திடம் அருள் செல்வம் தொடர்பாக கேட்டபோது அவர் கூறிய விடயங்கள் எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“அருள்….. ஒரு வெறிபிடித்த படைப்பாளி. நான் அவருடன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் அவருடைய வேகத்திட்கு யாரும் வேலை செய்ய முடியாது . தான் எடுத்த தயாரிப்பை வித்தியாசமாக கொடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை … நிச்சயமாக MISSION JAFFNA ஒரு வித்தியாசமான படைப்பு .. இது அவர் எடுத்த படைப்புக்களை விட ஒரு Action படைப்பு …பேசப்படும் ஒரு படமாக அமையும் என்றார் “
பெறும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் MISSION JAFFNA இலங்கை தமிழ் சினிமாவில ஒரு Action Tamil Blockbuster என்பதால் எந்த சந்தேகமும் இல்லை