இரை தேடும் பறவைகளை பறக்க விடுவோம்
நடிப்பில் RIYAS காட்டி இருப்பதோ MASS
சக்தி டிவியின் ரியாஸ் , Relax Time ரியாஸ் இப்படி பல பெயர்களில் அறியப்பட்ட ரியாஸ் மொஹமட் தற்போது RTV ஊடகத்தை நடத்தி வருகிறார் .
தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் .
அவரது புதிய அவதாரம் தான் காணொளி பாடலில் நடித்துள்ளார்.
குடும்ப சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சொந்த பந்தங்களை பிரிந்து
வெளிநாடுகளுக்கு தொழில்புரியச் செல்லும்,ஆண்களும் ,பெண்களும் அனுபவிக்கின்ற துன்பங்கள் ஏராளம்.
தொழில் எப்படியிருந்தாலும்,வந்து போகின்ற பசுமையான நினைவுகள் அவர்களை ஒரு தனிமையான சூழ்நிலைக்கு கொண்டு செல்கின்ற பரிதாபத்தை நாம் அன்றாடம் நம் கண்முன்னே காண்கின்றோம்.
எனினும் இந்த வெளிநாட்டு வாழ்கையை அனுபவிக்கின்ற,மற்றும் அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலிகளின் வீரியத்தை உணர முடியும்.
06.07.2024 வெளியாகும் முஹம்மத் ரியாஸின்”இரைதேடும் பறவைகள்” என்ற பாடலின் அழகிய வரிகளில் அந்த வலிகளை நம்மால் உணர முடிகின்றது.
உணர்வுபூர்வமான ரியாஸின் பாடல் வரிகள் ,உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும் இசையமைப்பாளர் சமீலின் அற்புதமான இசை,பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.
ரியாஸின் நடிப்பு,மனைவியின் பாத்திரத்தில் நடிக்கும் நடிகை pearlija jayaraj தன் முகபாபத்தில் காட்டும் தனிமையின் வலிகள் யதார்த்தமாக இருக்கிறது .
PIRIYANTHAN GNANACHANDRANINNனின் அற்புதமான் எடிட்டிங்,
சிறு கதாபாத்திரம் என்றாலும் நண்பர்களாக நடிக்கும் நஸீர்,சுரேஷ் விஜய் போன்றவர்களின் நடிப்பு பாராட்ட வைக்கிறது .
ZAINA RIYAS,SUREKA,INDIRAN மற்றும் MATHARKHAN BASHவின் Cinematographerவும் பாட்டை மேலும் மெருகூட்டியுள்ளது.
பாடலின் எமது lankatalkies இணையதளத்தின் வாழ்த்துக்கள் .