நடிகை நவயுகாவை நாம் அனைவரும் நன்கு அறிவோம் . ஆனால் அவருக்குள் இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளர் இருந்தது இப்போது தான் நமக்கு தெரிகிறது .
அவரையது கைவண்ணத்தில் உருவான கவிதை தான் சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்.
அவர் எண்ணத்தில் தோன்றிய இந்த கவி வரிகள் எவ்வளவு உணர்வு பூர்வமாக உம்ளது என்பதை வசித்தவர்கள் நன்கு அறிவார்கள் .
இக் கவிதை தொகுப்பு பற்றி நவயுகா இவ்வாறு பதிவிட்டுள்ளார் .
இக் கவிதைத் தொகுப்பை எழுதி முடித்தபோது என் வாழ்வியலின் வாடை அதில் வீசிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. இது என் மனதின் சிறு இளைப்பாறுதல். இதை இழப்புகளின் உச்சத்தில் மனமுடைந்த மூப்பின் பிரதிபலிப்பு என்றும் சொல்ல முடியும். மொத்தத்தில் ஒருவித புரிதலோடு கூடிய இருத்தலுக்கான கொழுகொம்பாகவே என் எழுத்துக்களை நான் கருதுகிறேன்.
என் தேசத்தின் கதைகளைக் கேட்பதற்கும், சுதந்திர விரும்பியாக சுற்றித் திரிவதற்கும், என் நம்பிக்கை விதையைத் தேடுவதற்கும், ஆண் பெண் பேதங்களைக் கடந்து காதலனாகவோ காதலியாகவோ உலா வருவதற்கும் என் பவளத் தீவில் நீங்கள் நம்பிக்கையோடு கால் பதிக்கலாம்.
- நவயுகா
நவயுகாவிற்கு கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.