வாழும் போது கலை நிலா எதிர்பார்த்தது மறைந்த பின் வந்து குவிவது தான் கவலை

இன்று காலை இலங்கை கலை தாயிக்கு மிக கவலையான நாள் காரணம் சிரேஷ்ட அறிவிப்பாளர் கலை நிலா உவைஸ் ஷெரிப் அவர்களின் மறைவு .

கிட்டத்த்தட்ட 44 ஆண்டுகள் இலங்கை கலை துறையில் சாதித்து காட்டியவர் இன்று கண் மூடினார் .

இலங்கைக்கு ஆரம்ப காலத்தில் அதாவது 1990 காலப்பகுதியில் பல இந்திய நட்சித்திரங்களை இலங்கைக்கு அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியவர் .

அது மட்டுமில்லாது I T N முத்துச்சரம் நிகழ்ச்சியை நாம் மறக்க முடியாது .பல தசாப்தங்களாக இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சாதனை படைத்தவர் .

இன்றைய தினம் நாம் காண கூடிய விடயம் என்னவென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை புகழ்ந்து வாழ்த்தி பாராட்ட வேண்டிய நாம் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி பதிவிடுகிறோம்

இணையாவது இவரை போன்ற மூத்த கலைஞ்சர்களை வாழும் காலத்தில் பாராட்டுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!