மாதவன் மகேஸ்வரன் பல விருதுகளை பெற்ற நம் நாட்டின் இயக்குனர்களில் ஒருவர்
அவரது இயக்கத்தில் வெளிவர இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .
பல வருடங்களாக காத்திருப்பில் இருந்த இந்த படம் கோமாளி கிங்ஸ் க்கு பிறகு இலங்கை தமிழ் திரையுலகம் காத்திருந்த ஒரு படைப்பாகும் .
கிருதிஹன் மதிரூபன் தனது பதிவில் இவ்வாறு படத்தை பற்றி கூறியுள்ளார்
நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த நம்மவர் தயாரிப்பான சொப்பன சுந்தரி திரைப்படம் வெளிவர இருக்கிறது. அதன் Trailerஐ இன்று பார்க்கக் கிடைத்தது.
பல பரிச்சயமான முகங்கள் தென்பட்டதால் அவர்களைக் கவனிப்பதா அல்லது ட்ரெய்லரைக் கவனிப்பதா என்பது தான் சவாலாக இருந்தது. ஒருவிதமான கடத்தல், அடிதடி கலந்த கதை ஒருபுறமாகவும் இன்னொரு புறம் நண்பர்கள், காதல் என்று ஜாலியான கதையாகவும் இரண்டும் கலந்து இருக்கிறது.
இதன் ஓப்பனிங் ஷாட்டில் பங்கெடுத்த அனுபவம் இருக்கிறது. அந்தக் காட்சி பற்றிப் படம் வந்தபிறகு பேசலாம். ஆனால் ஒரே டேக்கில் தொடர்ச்சியாக எடுக்க முயற்சி செய்தார்கள். அதை நிறைவேற்றியும் விட்டார்கள். அந்தளவில் திரை அனுபவம் புதிதாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது. கதையிலும், திரைக்கதையிலும் என்ன புதுமை இருக்கிறது என்பதைப் படத்தைப் பார்த்துத் தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆர்வமாக இருக்கிறேன். படக்குழு சார்ந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️🙏
“பிரம்மாண்டமா இருக்கே”
“உனக்கும் அப்டித்தான் தோணிச்சா?”
“எங்களுக்கும் அப்டித்தான் தோணுது” 😋
Mathavan Maheswaran Joel Chriz Kajanan Kailainathan Naresh Nagendran Varuon Thushyanthan Dhanush Chelvanathan
————————————————
பிரேம் ஷங்கர் தனது பதிவில் இவ்வாறு படத்தை பற்றி கூறியுள்ளார்
Mathavan Maheswaran இயக்கத்தில் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் “சொப்பன சுந்தரி” படத்தின் trailer அட்டகாசமா இருக்கு.
நம்நாட்டு பசங்கட படம் என்பதை தாண்டி படம் எடுத்த விதமும் கதையும் நகைச்சுவையும் படத்தை பேசு பொருளாக்கும் என்பது trailerஐ பாக்கும் போது தெரிகிறது.
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
We are waiting
———————————————————-
இயக்குனர் நடராஜா மணிவண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்
சொப்பன சுந்தரி!
ஒரு ஜாலியான திரை அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்.
வாழ்த்துகள் இயக்குநர் Mathavan Maheswaran & team…….
மொத்தத்தில் படம் சக்கை போடு போட போகிறது . திரைக்கு வரும் இக்கால இளையோரை மகிழ்விக்க இரு சொப்பன சுந்தரிகளான நிரஞ்சினி , பேரிஜா களத்தில் இருக்கிறார்கள்
இலங்கை படைப்பாளிகளின் திறமைகளை உலகறிய செய்யும் இலங்கையின் ஒரே ஒரு இணையதளமான lankatalkies இன் வாழ்த்துக்கள்