ஈழத்து வளர்ந்து வரும் பாடகி கில்மிஷா எவ்வாறு ஊடக பரப்பில் வந்தார் என டான் குழும தலைவர் குகநாதன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துச்சிறுமி இந்தியாவின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபதநி நிகழச்சியில் பாடுவது நமக்கெல்லாம் பெருமைதான்.
அவர்கள் நமது பாடகர்களை எந்த அளவிற்கு கௌரவிப்பார்கள் என்பதை கடைசிவரை காத்திருந்து அறிந்துகொள்வோம்.
அதுவல்ல நாம் சொல்ல வருவது, டான் ரிவியில் கலக்கல் ஸ்ரார் என்ற நிகழ்ச்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தபோதே அவரை இனம்கண்டு ஒரு ஊடகப்பரப்பில் பாடவைத்தவர் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்- டான் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஐ. செல்வச்சந்திரனுக்கு நன்றிகள்.
அவர் ஈழத்து ஊடகம் ஒன்றில் பாடியபோது கண்டுகொள்ளாத நம்மவர்கள் இப்போதாவது அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியதே.