ஒரு காலத்தில் இலங்கை வானொலிகளில் அறிவிப்பாளர் ஆக வேண்டும் என்றால் அதற்கு பல வருடங்கள் தவம் இருக்க வேண்டும் .
சூரியன் வானொலியில் 20 வருடத்திற்கு முதல் சேர்வதும் சரி , லண்டன் போறதும் சரி.
ஆனால் இன்று சூரியன் வானொலிக்கு அறிவிப்பாளர் தேவை என்ற விளம்பரத்தை காணகூடியதாக உள்ளது . இதுவும் கூட புதிய அறிவிப்பாளர்களுக்கு வாய்ப்பு தருவதாக அமைகிறது .
இக்காலத்தில் பாட்டு மற்றும் பேச்சை நம்பி நேயர்களை கட்டி போட்டு வைக்க முடியாது . காரணம் அவர்கள் வானொலியை தாண்டி Facebook ,Youtube ,Tictok ,twitter instagram என்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக தங்கள் காலத்தை செலவழிக்கிறார்கள்.
இது இப்படி இருக்க மேற்குறிப்பிட்ட அத்தனை தளங்களிலும் நேயர்களை மகிழ்விக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வரு வானொலிகளும் இருக்கிறது .
அவ்வாறு வேறு ஒரு போட்டி வானொலி ஒரு வீடியோ போட்டால் உடனே அன்றைய தினமே ஒரு வீடியோவை போட வேண்டிய கட்டாயத்தில் வானொலிகள் இருக்கிறது .
அவ்வாறு வீடியோ போடாவிட்டால் பணிப்பாளர் திட்டுவார் . சக அறிவிப்பாளர்களுடன் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது “இப்போது மட்டும் பேசுங்க ..ஆனால் வீடியோ செய்யாதீங்க ” என்று பணிப்பாளர் திட்டுவதாக ஒரு சகோதரி எம்மிடம் சொல்லி கவலைப்பட்டார் .
இது இப்படி இருக்க இன்னொரு வானொலி சகோதரிக்கு அடுத்த மாதம் கல்யாணமாம் . அவரை Tictok வீடியோ செய்ய சொல்லி அழுத்தம் கொடுப்பதாக அழுகையுடன் சொன்னார் .
வீடியோ போட முடியாது என்று சொன்னால் அடுத்து தான் இருக்கும் வேலைக்கு வந்து ஒன்றல்ல 100 வீடியோ போட வெளியில் 1000 பேர் இருக்கிறார்கள் .
ஆனால் இவை அனைத்தையும் தாண்டி பல உள்ளக அரசியல்களையும் சமாளித்து ஒவ்வரு இலங்கை தமிழ் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் படும் பாடு இருக்கிறதே அது அவ்வளவு கஷ்டமான விடயம் .
இவர்கள் ஒவ்வரு வானொலி அறிவிப்பாளர்களும் பதிவிடும் விடியோக்களுக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவோம் . அப்போதுதான் அவர்கள் வீட்டிலும் அடுப்பெறியும் .