பொதுநலம் மிக்க மிகச் சிறந்த மனிதர் ‘’சுந்தரி‘’இயக்குனர் அழகர்சாமி இரங்கல்

மறைந்த மூத்த கலைஞ்சர் கலாபூஷனம் சந்திரசேகரன் அவர்களது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

சந்திரசேகர் ஐயா,
இலங்கையின் மிகப்பெரிய கலைஞர் மூத்த கலைஞர் அவர்களுடைய மறைவு மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,

நான் இந்திய தொலைக்காட்சி தொடருக்காக இலங்கை வந்த பொழுது
திரு சந்திரசேகர் ஐயா அவர்கள் எனக்கு வழிநடத்தி, அங்குள்ள நடிகர்கள் அறிமுகப்படுத்தி எனக்கு மிகவும் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்து, அவரும் எனது தொடரில் இணைந்து பணியாற்றினார்.

அதை என்றென்றும் என் நினைவிருக்கும் வரை மறக்க முடியாது.

பொதுநலம் மிக்க மிகச் சிறந்த மனிதர்.

சென்ற மாதம் என்னுடன் தொலைபேசியில் அழைத்து நான் இயக்கி வரும் சுந்தரி தொடர் நாடகத்தையும் அதில் நடித்த கலைஞர்களையும் மனமார பாராட்டினார்.

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய சுந்தரி தொடரின் கலைஞர்களின் சார்பாக வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி🙏

பொதுநலம் மிக்க மிகச் சிறந்த மனிதர் சுந்தரி இயக்குனர் அழகர்சாமி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!